இலத்திரனியல் கட்டண பட்டியல் முறை அறிமுகம்!

Date:

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் கட்டண பட்டியல் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர்  பியால் பத்மநாத தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாம் 2023 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளருக்கு கட்டண பட்டியலை செலுத்தும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சோதனை அடிப்படையில், கொழும்பு தெற்கு நகரம், கண்டி தெற்கு நகரம், திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய 4 பிராந்திய அலுவலகங்கள் தொடர்பில் இணையவழி இலத்திரனியல் கட்டண முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது. 2024 ஜனவரி முதலாம் திகதி  முதல் இலங்கையில் இதை விரிவுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். அதனால் எந்த பயமும் வேண்டாம். முன்பை விட வேகமாகவும் துல்லியமாகவும் இதனூடாக கட்டண பட்டியலை  வழங்கலாம். 1939 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஸ்மார்ட் கைப்பேசி இல்லாத ஒருவருக்கு அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...