பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்: ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Date:

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது இராஜினாமா கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

சட்டமா அதிபருக்கு எதிராக நீதவான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் வினவியதோடு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதவானுடன் தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கலந்துரையாடியதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...