தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை: 75 வீதம் குறைவடைந்த கேக் விற்பனை

Date:

இந்த ஆண்டு நத்தார் பண்டிகையின் போது கேக் விற்பனை 75 வீதம் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டைவிட 2023 ஆம் ஆண்டு கேக் விற்பனை 25 வீதம் குறைவடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நத்தார் பண்டிகைக் காலத்தில் வீடுகளில் கேக் தயாரிக்கும் நடவடிக்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...