இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

Date:

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும்மழை நிலைமை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…..   

அனுராதபுரம் – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

மட்டக்களப்பு – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – அடிக்கடி மழைபெய்யும்.

கண்டி – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

மன்னார்- அடிக்கடி மழை பெய்யும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...