இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும் : அமைச்சர் நளின்

Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் பலன்கள் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவில் வழங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...