இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரை குழு பயணம்: இலங்கைக்கான சவூதி தூதுவர் வழியனுப்பி வைப்பு

Date:

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரை குழு இன்று (21) செவ்வாய்க்கிழமை புனித மக்கா நோக்கி  பயணமாகியது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில்  இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இலங்கை ஹஜ் கமிட்டியின்  தலைவர்  இப்ராஹிம் சாஹிப் அன்சார் அவர்கள் உள்ளிட்ட சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அங்கு  தூதுவர் அவர்கள் இராச்சியத்தின் விருந்தினர்களாகச் செல்லும் இலங்கை யாத்ரீகர்களை வாழ்த்தியதோடு, இரு புனிதஸ் தலங்களினதும் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான முகமத் பின் சல்மான் அவர்களது அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு வருகைத் தரும் யாத்ரீகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும், அவர்களின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும், தமது ஹஜ் கிரியைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை ஹஜ் யாத்ரிகர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பில், சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் அதிகாரிகள் தூதரகத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...