admin
-
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!
தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளம் ஊடாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான முறைமைப்படுத்தல்கள்…
-
GB WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
GB WhatsApp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சிறுவர்கள் குறித்து ஜனாதிபதி பொலிஸாருக்கு அதிரடி பணிப்புரை!
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப்…
-
“எவரையும் கைவிடாதீர்கள்” வேலைத்திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள்!
“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 624, 714 விண்ணப்பங்கள்…
-
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிப்பு!
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு 200 ரூபா…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
-
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
திருகோணமலை – மூதூர், கங்குவேலி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கங்குவேலி பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே நேற்று(12) மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரின் சடலம்…
-
இலங்கையில் 1163 பள்ளிவாசல்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யாமல் இயங்குகின்றன: இப்றாஹீம் அன்சாா்!
நான் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ஒர் வருடம் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் 2544 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் 1163 பள்ளிவாசல்கள் திணைக்களத்தில் பதியப்படாதவைகளாகும். சில பள்ளிவாசல்கள் 10 வருடங்கள் 72 வருடங்கள் சென்றும் திணைக்களத்தில் பதியப்படாமல் வைத்துள்ளனா். கடந்த உயிர்த்த ஞாயிறு…
-
கோட்டாபய அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் தொடர்பில் கணக்காய்வு ஆரம்பம்!
கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது…