admin
-
இலங்கை ஜனாதிபதியை எதிர்பார்த்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்.
-
வாக்கெடுப்பின்றி புதிய ஜனாதிபதி, பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும்: PAFFREL!
அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (PAFFREL) தெரிவித்துள்ளது.
-
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டில் இன்று 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை: அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்!
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அனைத்து தரப்பினரும் விரைந்து செயற்பட வேண்டும் என…
-
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
பத்தரமுல்லை பகுதியிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று(13) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 05 பெண்களும், இராணுவ சிப்பாய் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்…
-
கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் தகவல் வெளியானது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால், சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர் தவறவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாலைதீவு அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக இவரின்…
-
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய…
-
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து காத்தான்குடி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பில் பல்வேறு ஊடகங்களில் கடமையாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களால் மாபெரும் கண்டன…
-
இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா!
இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவல்றிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில்…