admin
-
போதை மாத்திரைகளுடன் 22 வயது இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை…
-
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம் – மைத்திரி!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த…
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் என்பனவற்றை நடத்த தடை…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,…
-
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க: இன்று மாலை பதவியேற்பு!
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு…
-
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து…
-
பொதுசொத்துக்களுக்கு சேதம் விலைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு!
இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் விலைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரலாற்றில்…
-
இலங்கைக்கான பயண ஆலோசனையை வெளியிட்ட அவுஸ்திரேலியா!
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் இலங்கைக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக, இலங்கைக்கான பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த…
-
பணிப்புறக்கணிப்பு குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்மானம்!
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது. எனினும், குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக, அதன்…
-
கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னெடுப்பு!
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் இன்று மட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 வரையிலான கால பகுதியில் பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.