தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. கே. புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வியும் மற்றும் கணக்கீடு ஆகிய பாடநெறிகளுக்கு நேர்முகப்பரீட்சை சுகாதார விதிமுறைகளுடன் மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.
(எம்.ஜே.எம்.சஜீத்)