ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் செயற்திட்டம் 

Date:

“மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்”. எனும் தொணிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்திட்டம் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பயன்தரும் மரங்களை இலக்கு வைத்து வாழ்வாதார பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் குறித்த செயற்திட்டம் , கிளிநொச்சி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் நெடுங்கேணி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு  சுமார் 100 மாணவர்களுக்கு பயன்தரும் பல்வேறு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை யாழ்மாவட்டத்திலும் இவ் அமைப்பினால் இவ்வாறான செயற்பாடுகள் இதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...