பலசரக்கு விற்பனை நிலையத்தில் தீ

Date:

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் நேற்றுமாலை தீபிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துநாசமாகியது.
குறித்த வர்த்தகநிலையம் இன்றுமாலை திறக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீர்என்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபாரநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில்  எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார ஒழுக்கி தீவிபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில்  சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...