பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Date:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (2021.02.23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1.பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

2.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

4.கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு

5.கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரதமர் ஊடக பிரிவு

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...