இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துடன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தினார்.
இச்சந்திப்பின்போது பலவந்த ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் சமூகத்துக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க பிரார்த்திப்போம்.
—————‐—————————Update——————–
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் தற்போது அதற்கான உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.