இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
குறிப்பாக 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார்.