இன்று இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணம் செய்யும் விஷேட விமானம் தனது வான்பரப்பின் ஊடாக பயணம் செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் இன்று மாலை இலங்கை வரவுள்ளார். 2019ம் ஆண்டு இந்திய பிரதம மந்திர நரோந்திர மோடி அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் விஜயம் செய்த போது அவரது விமானம் பாகிஸ்தான் வான் பரப்பின் ஊடாகப் பயணம் செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. நரோந்திர மோடி காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு தனது வான் பரப்பின் ஊடாகப் பயணம் செய்ய அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்தது.
இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இம்ரானின்; விமானம் இன்று தனது வான் பரப்பின் ஊடாக பயணம் செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் கொவிட் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.