கிளிநொச்சி நகரில் பாரிய விபத்து

Date:

கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
குறிதத் விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...