கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது துபாயில் உள்ள இலங்கை தூதரகம்!

Date:

துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் பெப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டப்பாடுவதாக துபாய் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீண்டும் துபாய் துணைத் தூதரக வளாகத்தை கிருமி நீக்கம் செய்த பின்னர் அலுவலகம் பொது மக்களுக்காக திறக்கப்படும். மூடியிருக்கும் இந்த காலத்தில் அவசர நிலைமைகளில் பொதுமக்கள் slcg.dubai@mfa.gov.lk என்ற மின் அஞ்சல் மூலம் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

– பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...