கொவிட் தடுப்பூசி விவகாரம் | ஆர்ஜன்டீனா சுகாதார அமைச்சர் ராஜினாமா

Date:

தென் அமெரிக்க நாடான ஆஜன்டீனாவில் கொவிட் தடுப்பூசி சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு சர்ச்சை காரணமாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கின்ஸ் கொன்ஸலாஸ் கார்ஷியா தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

ஆர்ஜன்டீனாவில் பலவேறு பகுதிகளில் மக்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் ஏனைய முன்னிலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் பொது மக்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பொது மக்களுக்கு வழங்கபட்டு வரும் நிலையில் சில இடங்களில் மக்கள் உரிய வரிசையில் வராமல் வரிசையை மீறி முன்னாள் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளார் என்பதே அமைச்சர் மீதான குற்றச்சாட்டாகும்.

இந்த விடயம் நாட்டின் சமூக ஊடகங்கள வழியாக மிகவும் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து ஆர்ஜன்டீனா ஜனாதிபதி அல்பர்டோ பெர்ணான்டஸம் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். கொன்ஸலாஸ் கார்ஷியா ஒரு சிறந்த அமைச்சர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் இருந்தாலும் பொது மக்களோடு சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியமை மிகவும் தவறானதோர் நடைமுறையாகும். இது ஆஜன்டீனாவில் பின்பற்றப்படும் அரசியல் கலாசாரத்துக்கு முற்றிலும் மாறானது. கொவிட் தடுப்புசி விடயத்தில் எவருக்கும் சிற்ப்புரிமை கிடையாது. அவரவர் உரிய முறைப்படியே அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது கண்டனத்தில் தெரிவித்திருந்தார்.இதனை அடுத்தே தனது தவறை ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சர் தனது பதவியையும் ராஜினாமாச் செய்துள்ளார்.

Popular

More like this
Related

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...