தீவிரவாதக் குழுவின் தலைவர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ள மாட்டார்கள்! எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல – மஹிந்த அமரவீர

Date:

மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல, அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பல உள்ளன என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து, மக்கள் எதிர்பார்த்தது இவ்வாறான அறிக்கை இல்லை.

இந்த ஆணைக்குழு குறித்தோ, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தோ தான் எந்தவோர் அபிப்பிராயத்தையும் முன்வைக்கப் போவதில்லை. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில், எமது சட்டத்தரணிகள் குழுவுடன் இது குறித்து முழுமையாக ஆராயவுள்ளோம்.

மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல. அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பலஉள்ளன. உலகில் எந்தவோர் இடத்திலும் தீவிரவாதக் குழுவைச் செயற்படுத்தும் தலைவர் ஒருவர், தற்கொலை செய்துகொள்ள மாட்டார். எனவே, இந்தத் தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான், ஏன் தற்கொலை குண்டுதாரியானார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சஹ்ரானை வழிநடத்தியவர் யார், என்ற சந்தேகம் எமக்கிருந்தாலும் அதற்கான பதில் இவ்வறிக்கையில் இல்லை. இந்தத் தாக்குதலுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் அல்லது வேறு குழுவினர் அல்லது இதில் சர்வதேசத்தின் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம், பொதுமக்களுக்கு இருந்தாலும் அது தொடர்பான எவ்வித தகவல்களும் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி, இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விடயங்களுடன் எம்மால் இணங்க முடியாதுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...