பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் (புர்காக்கள் உள்ளிட்ட பிற முகமூடிகள்) ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பான திட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இன்று காலை நீதி அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையில் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.
இது திருமணத்திற்கான வயது குறைந்தபட்சம் 18 ஆக இருக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.
மேலும் திருமணத்தின் போது ஒரு பெண் கையெழுத்திட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை அணியும் வகையில் (புர்கா உட்பட) ஆடைகளை அணிவதைத் தடைசெய்ய சட்டங்களைக் கொண்டுவர அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முகத்தை முழுமையாக மூடும் புர்காக்களை தடை செய்ய நடவடிக்கை!
Date:
