வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும் | சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Date:

வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் இப்பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

இலங்கை பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவரும், சர்வதேச தலைமை பயிற்றுவிப்பாளருமாகிய சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க வளவாளராக கலந்துகொண்டு வடக்கு மாகாண வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

அத்துடன் அமைப்பின் பிரதித்தலைவர் காசன் ஜெயசேகர, செயலாளர் பாரீஸ் மௌலானா, பொருளாளர் சரீட் சோனல் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 வீர, வீராங்கனைகளுக்கு கிக் பொக்சிங் பயிற்சி பட்டறையானது 13-02-2021 மற்றும் 14-02-2021 வரை நடைபெற்று நேற்று மாலை பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் பிரதித் தலைவர் கெ.குமாரசாமி, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், சமூகசேவையாளர் எஸ்.கஜேந்திரகுமார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கெ.கமலன், வர்த்தகரும், சமூக ஆர்வலருமான எஸ்.ரூபன் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் ஆர்.சுவிதர் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.

வவுனியா நிருபர்
கோகுலன்

Popular

More like this
Related

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...