செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பனை காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலைஅங்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் இருந்து செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய பொலிசார் மற்றும் விசேட அதிரடிபடையினர் பழுதடைந்த நிலையில் காணப்படும் இரண்டு தற்கொலை அங்கிகளை மீட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கோகுலன்
வவுனியா நிருபர்