தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையில் கொண்டுவரப்பட்ட மாசகர சபை ஆணையாளரின் அதிகாரத்தைக் குறைக்கும் பிரேரணைக் கெதிராக மாநகர சபை ஊழியர்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள மாநகர சபை முல்வருக்கும் புதிதாக கடமையேற்ற ஆணையாளர் எஸ்.தயாபாரனுக்கும் இடையே முறுகல் நிலையையடுத்து கடந்த 8ம் திகதி சபையின் அமர்வில் ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டது அதன்போது சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட 18 பேர் சபையில் இருந்து வெளியேறிய நிலையில் 20 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து பிரேனை கொண்டுவரப்பட்டது நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் தயாபரனின் கடமை அதிகாரத்தை மாநகரசபை அமர்வில் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் நேற்று கண்டன ஊர்வல ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
மாநகரசபை உத்தியோகத்தர்கள் இஊழியர்களின் ஏற்பாட்டில் மாநகர சபையில் கடமைபுரியும் ஊழியார்கள் அனைவரும் கடமையை பகிஷ்கரித்து மாநகரசபைக்கு முன்னாளால் ஒன்றிணைந்து ஆணையாளரின் சேவையை களங்கப்படுத்தாதேஇ ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்க நீங்கள் யார்?இ ஊழியரை அதிகாரம் செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாதுஇ அரசாங்கத்தில் கடமைபுரியும் உறுப்பினரே உங்கள் கடமையை துஷ்பிரயோகம் செய்யாதேஇ ஆணையாளர் எமது தலைவர்இ ஊழியர்கள் அடிமை இல்லைஇ நிர்வாகத்தில் அரசியல் வேண்டாம்இ போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் எந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகத்தர்கள் .ஊழியர்கள் அங்கிருந்து நகரின் மத்தியிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்று நகர் காந்தி பூங்கா முன்னாள் சில நிமிடங்கள் தரித்து நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் ஊர்வலமாக மாநகரசபையை அடைந்த பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுநருக்கு கையளிக்கும் வகையில் மகஜரை மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்