வவுனியாவில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட அபிவிருத்தி குழு தலைவர்

Date:

வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன்    இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கால்நடைகள் நீர் குடிப்பதற்காகவும்   மேய்ச்சல் தரையாகவும் பயன்படுகின்ற குளத்தின் அலைகரை பகுதிகளை தனியார் அத்துமீறி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் கால்நடைகளுக்கான மேச்சல் தரை இல்லாது போயுள்ளது.
இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைவளர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக வவுனியா பத்தினியார்மகிழங்குளம்,ஓயார்சின்னக்குளம், கதிர்காமசின்னக்குளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவாக தீர்த்துத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் கால்நடை வளர்ப்பாளர்களிடம் தெரிவித்தார்.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...