அநுராதபுரத்தில் வேகமாக பரவும் தோல் நோய் தொற்று

Date:

அனுராதபுர பகுதியில் Tinea என்ற பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் இன்று (04) தெரிவித்தனர்.
இந்த நோயால் “பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றி படிப்படியாக பரவும், Tinea பூஞ்சை தொற்று தொடுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடைகள் மூலமாகவோ பரவக்கூடும்” என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பாலியல் சுகாதார மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் இன்று(04) தெரிவித்தனர்.
வைத்தியர் ஹேமா வீரகோனின் கூற்றுப்படி, ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று குணமாகும்.
பூஞ்சை தொற்றுநோய்களுக்கு, சரியான அளவை பரிந்துரைத்த சிகிச்சையை ஆறு வார காலத்திற்கு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகையில், வைத்தியர் ஹேமா வீரகோன், சிகிச்சை காலத்திற்கு இடையில் நிறுத்தப்படுவது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...