இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்!

Date:

வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டுபேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 4மணிக்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ….

ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திசென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்
எனினும் வாகனம் நிற்காமல் சென்றமையால் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சயீவன் ஆகியோரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரம் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...