இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் மார்ச் மாதம் 22ஆம் அல்லது 23ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும்

Date:

இந்த தீர்மானம் முழுக்க முழுக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கொண்டதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நகல் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட போது அது தொடர்பாக பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்த கலந்துரையாடல்களின் போது அந்த தீர்மானத்தில் மாற்றங்களை கொண்டுவர அல்லது அதன் வசனங்களில் மாற்றங்களை செய்ய அல்லது வார்த்தைப் பிரயோகங்களின் காரத்தை தணிக்க இலங்கை ராஜதந்திரிகள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவே இன்று வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரிட்டன் தலைமையிலான கனடா ஜெர்மனி மாளவி வட மெசடோனியா மற்றும் மொன்டினெக்ரோ
ஆகிய நாடுகளைக் கொண்ட குழு இந்த தீர்மானத்தை இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளது. இனி வாக்கெடுப்பில் இருந்து தப்பிப்பது மட்டுமே அல்லது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது மட்டுமே இலங்கைக்கு உரிய ஒரே தெரிவாக உள்ளது.

ஆனால் அதிலும்
பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன ஈரான் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையை வெளிப்படையாக ஆதரித்து வரும் நிலையில் இந்தியா நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. நேற்று ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடந்த தொலைபேசி மூலமான உரையாடலின்போது இந்த விடயம்
கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்திய பிரதமரிடம் வினயமாக வேண்டியுள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் மார்ச் 22 அல்லது
23ஆகிய தேதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படும் போதுதான் இலங்கை இந்த தீர்மானத்தில் இருந்து தப்புமா அல்லது மாட்டிக்கொள்ளுமா என்பது தெரியவரும் ஒருவேளை தீர்மானத்தில் இலங்கை மாற்றிக்கொண்டால் அதற்கு பிந்திய இராஜதந்திர நகர்வுகள் மிகவும் சிக்கலானவை யாகவும்
ஆபத்தானவை யாகவும் அமையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...