இலங்கையின் பேசும் பொருளாக மாறியுள்ள யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்து!

Date:

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்தே இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது அதன்படி ,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இன்று அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இதன்படி ,தனது குடும்பத்தினர் மற்றும் அவரது சொத்துக்கள் குறித்து தனது கிராமவாசிகளிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பாக்யாய அபேரத்ன எனும் யுவதி தெரிவித்தார்.

இறக்குவானையை அண்மித்துள்ள சிங்கராஜ வனப் பகுதியில் இடம்பெற்று வரும் காடழிப்பு குறித்து, குறித்த அந்த நிகழ்ச்சியில் பாக்யா தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அந்த தகவலை அடுத்து, பாக்யா தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அவர் சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் சூழல் மாசடையும் விதத்தில் கட்டுமானப் பணியில் உள்ள ஒரு ஹோட்டல் பற்றி குறித்த நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பில் பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து அப்பகுதியில் ஏற்படும் சூழல் மாசடைவு குறித்து விசாரித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த ஹோட்டல் கட்டப்படும் நிலத்தின் உரிமையைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், காலையிலும் மாலையிலும் தான் காணும் சுற்றுச்சூழலின் மாசடைவு குறித்து பொலிஸாரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கராஜ அருகே ஆனையிறவு கட்டப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் குறித்த அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய கருத்தின் பின்னர், சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...