இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி வடிவம் நாளை

Date:

தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்தின் இறுதி நகல் வரைவு நாளை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தத் தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி ஆராயும் முறைசாரா மேலதிகக் கூட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் இறுதி அமர்வு இன்று இடம்பெற்று தீர்மானத்தின் இறுதி நகல் வடிவம் நாளை வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதை இலங்கை அரசு எதிர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்துள்ள அவதான அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ள இலங்கை அரசு அதன் அடிப்படையிலான எந்த ஒரு தீர்மானத்தையும் ஏற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் குழு மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கை அரசின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பிரிட்டனின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே இது சம்பந்தமான மேலதிக் முறைசாரா கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த முறைசாரா கூட்டங்களின் போது இலங்கை தரப்புக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பி இருந்தன. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகளே இந்தக் கூட்டங்களின் போது இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இந்த முறைசாரா கூட்டத்தொடரின் போது மேற்குலக நாடுகளும் குறிப்பாக ஸ்கண்டிநேவிய பிராந்திய நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. சீனா, ரஷயா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...