சீன இணையதளங்களுக்கு தடை விதித்தது சவுதி அரசு

Date:

சுமார் 184 சீன இணையதளங்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோசமான மற்றும் போலியான சலுகைகளைக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது என சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதிரியான வணிக நோக்க இணையதளங்கள் ஒழுங்குமுறை அதிகாரிகளைத் தவறாக வழிநடத்துகிறது.

இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை சவுதி அரசு எடுத்துள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வலைத்தளங்கள் நுகர்வோருக்கு வழங்கிய பொருட்களின் தரத்துடன் ஒப்பிடுகையில் ஏமாற்றப்பட்டதாக அல் ஜசிரா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வாடிக்கையாளர் சேவையுடன் கடையின் தரவு, முகவரி மற்றும் தொடர்பு எண்களை சேர்க்காத தளங்கள் அனைத்தையும் அமைச்சகம் தடுத்தது.

ஒரே நேரத்தில் அதிகமான மக்களை ஈர்க்கும் நோக்கில் சீனாவின் 184 தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எலக்ட்ரானிக்ஸ், வாசனை திரவியங்கள், பைகள், காலணிகள், உடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற நுகர்வோர் பொருட்கள் இந்த ஆன்லைன் வலைத்தளங்கள் மூலம் விற்கப்பட்டன.

இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சகம் தளங்கள் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டது, பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...