செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏழு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Date:

செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ்  ஏழு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு. திருகோணமலை ,கிண்ணியா பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமுர்த்தி பயனாளிகளான  ஏழு குடும்பங்களுக்கு  சௌபாக்கிய வீட்டுத் திட்டத்தின்கீழ்  வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி. தலைமையகல்
நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம் பெற்றது.

இதில் வழங்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளும் சுமார் 2 இலட்சம் பெறுமதியான இரண்டு அறைகளை கொண்டது.

இவ் வீடுகள் காக்காமுனை, நடுத்தீவு, பைசல் நகர், அண்ணல் நகர், ஆலங்கேணி மற்றும் கச்சக்கொடுதீவு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சமுர்த்தி பயனாளிகளில் வறுமையிலுள்ள வீடற்றவர்களை தெரிவு செய்து வழங்கப்பட்டது

இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத் ,  தலைமையக  சமுர்த்தி முகாமையாளர்  ஏ.முஹ்சீன்   குறிஞ்சாக்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.றிஸ்வி மகளிர் உத்தியோகத்தர் என்.பானு மற்றும் சமுர்த்தி உத்தியோக்தர்கள் என பலர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் தமது உரையில் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் வழங்கப்படுகின்ற இவ் வீட்டுத் திட்டத்தின் போது நீங்கள் எவ்வளவே பிரயோசனம் அடைகின்றீர்களோ அதற்காக நீங்கள் இந்த அரசாங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும் என பிரதேச செயலாளர் பயனாளிகள் தெரிவித்துக் கொண்டார்.

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நிருபர்

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...