செழிப்பான உற்பத்தி கிராமங்களை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு

Date:

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக சமுர்த்தி, வதிவிடப்பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின்சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் செழிப்பான வாரத்தினையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான “செழிப்பான உற்பத்தி கிராமங்களை ஆரம்பிக்கும்   அங்குரார்ப்பண நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்(06) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகெளறி டினேஸ் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக  பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் முகாமையாளர் எஸ்.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை கிராம பொதுமக்களது பிரசன்னத்துடன் பனைசார் பொருட்கள் உற்பத்தி  கிராம ஆரம்ப நிகழ்வானது மிகவும் கோலாகலமாக அதிதிகளினால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. பனைசார்  உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான வசதியினை கொண்ட கட்டடத்திற்கான கடிக்கல் நடப்பட்டதனைத் தொடர்ந்து,

 மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அதிதிகளின் உரையினைத்தொடர்ந்து, பனைசார் தொழில் முயற்சியாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் குறைகளை அதிதிகள் செவிமடுத்ததுடன் அவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் நிவர்த்திப்பது மற்றும் குறைகளை நிவர்த்திப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது பிரதேசத்தைச் சேர்ந்த பனைசார் உற்பத்தியாளர்களின்  உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றினை அதிதிகள் பார்வையிட்டதுடன், கொள்வனவில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...