தென்னை மரத்தை வெட்டினால் கிடைக்கும் தண்டனை

Date:

எதிர்காலத்தில் தென்னை மரங்களை வெட்டினால் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மரங்களை வெட்டுவதற்கெதிராக உள்ள சட்டத்தில் புதிய மரமொன்றை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் தென்னை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்குவதற்கான திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கம்பஹா – நைவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அண்மைக் காலமாக தேங்காய் விலை அதிகரித்துச் சென்றமை, கட்டட மற்றும் இதர தேவைகளுக்காக தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கை அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...