மன்னாரில் இருந்து இன்று காலை கண்டி நோக்கி பயணித்த அரச பேரூந்தில் வயோதிபர் ஒருவர் திடீர் மரணம்

Date:

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
-மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.
-இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
-இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...