முதல் ODI போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

Date:

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களையும், அணித் தலைவர் திமுது கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அசான் பண்டார 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜெசன் ஹொல்டர் மற்றும் ஜெசன் மொஹமட் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.

மேற்கிந்திய தீவீகள் அணி சார்பில் ஷாய் ஹொப் 110 ஒட்டங்களையும், இவின் லிவிஸ் 65 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...