முஸ்லிம் பண்பாட்டு கட்டிடத் தொகுதி

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த M.H. முஹம்மத் அவர்களின் பொறுப்பின் கீழ் இக்கட்டிடமானது கொண்டுவரப்பட்டது. இதற்கு முன் கொழும்பு 5, கெப்பெடிபோல மாவத்தையில் இயங்கிவந்த வக்குபு பிரிவும் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அன்று முதல் இத்திணைக்களம் 1990 ஆம் ஆண்டு வரை D.R. விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்திருந்த போக்குவரத்து அமைச்சு கட்டிடத்தின் மேல் மாடியில் இயங்கி வந்தது.
அதன் பின் M.H. முஹம்மத் அவர்கள் சபாநாயகராக பதவி மாற்றம் பெற்றதன் பின் திணைக்களம் இலக்கம் 34 மலே வீதி கொழும்பு 2 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது.

1994 ஆம் ஆண்டளவில் போக்குவரத்து அமைச்சராக இருந்த ஸ்ரீ மணி அத்துலத்முதலி அவர்களது காலப்பிரிவில் தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அமைந்திருக்கும் இக்காணி CGR க்கு சொந்தமான காணி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு துறைமுகங்கள் முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவூப் ஹக்கீம் அவர்கள் இவ்விடத்தில் திணைக்களத்துக்கு தற்காலிக கட்டிடத்தை சுமார் ஒரு கோடி ரூபா செலவில் பெற்றுக்கொடுத்து 2004 ஆம் ஆண்டு முதல் திணைக்களம் இக்கட்டத்தில் இயங்கத் தொடங்கியது.

2006 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் கலாச்சார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்களால் நட்டப்பட்டது.
ஒன்பது மாடிகளை கொண்ட இக்கட்டிடத்தின் வேலைகள் பூரணப்படுத்தப்படாத நிலையில் முஸ்லிம் சமய அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஹலீம் அவர்களது முயற்சியால் கட்டிடத்தின் மூன்று மாடிகள் பூரண படுத்தப்பட்டு 2017 ஜனவரி 17ஆம் திகதி அன்றைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களது காலத்தில் அவர் நிதியமைச்சராக இருந்த வேளை பாராளுமன்றத்தில் உரையாற்றும்பது
தமது அரசாங்கம் எதிர்காலத்தில் வக்பு ஹவுஸ் ஒன்றை நிர்மாணிக்க இருப்பதாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடம் தற்போது பறிபோகும் நிலையில் காணப்படுகிறது இது பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...