விசாரணையின் பின்னர் இழுத்துச் செல்லப்பட்ட ரஞ்சன் | வெளியான காணொளி

Date:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் இலங்கை பத்திரிகை பேரவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற சாட்சி விசாரணையின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அழைத்து செல்லும் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவரை பேருந்திற்குள் இழுத்து சென்று ஏற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தான் கொலை செய்யவில்லை, நீதிக்காகவே போராடினேன் என்னை இப்படி நடத்த வேண்டாம் என அவர் கூச்சலிட்டுள்ளார்.

எனினும் அதனை கண்டுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரிகள் அவரை பலவந்தமாக இழுத்து சென்று பேருந்தில் ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட காணொளியை ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோபூர்வ யூரியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள்...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத பல முக்கியஸ்தர்கள் பட்டியல் வெளியீடு

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024ஆம் ஆண்டுக்கான...

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...