வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா வசமானது

Date:

வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக்க ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

51 வயதாகும் சனத் ஜயசூரிய, 35 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றமை தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

Popular

More like this
Related

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

நாட்டின் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 75 மி.மீ. மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும்...

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...