அசுரன்’ தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது | விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!

Date:

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ‘விஸ்வாசம்’ படத்துக்காக டி.இமான் வென்றார்.
2019-ம் ஆண்டுக்கான 67-வது இந்திய தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘விஸ்வாசம்’ படத்துக்காக டி.இமானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒத்த செருப்பு’ படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019 அக்டோபரில் வெளியான படம் ‘அசுரன்’. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த தனுஷ் 2020-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றார். தற்போது அவருக்கு உச்சபட்ச அங்கிகாரமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. தமிழில் சிறந்த படமாகவும் ‘அசுரன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப்பெற்ற விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கி, அவரே தயாரித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கங்கனா ரனாவத் வென்றுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...