நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாமல் அல்லல் படுவதாகவே இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன
நேற்று முன்தினம் இடம்பெற்ற இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகளில் 90 வீதமான முடிவுகள் தற்போது உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளிவந்துள்ளன. இதன்படி ஆட்சி அமைக்க தேவையான 59 ஆசனங்களை நெதன்யாகு வும் அவரது வலதுசாரி கூட்டணி கட்சிகளும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இந்தத் தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில்
அரபு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பலஸ்தீன கொள்கைகளை ஆதரிக்கும் அரபு கட்சி ஐந்து ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அந்த கட்சி 5 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாள் அதுவே இஸ்ரேலின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு வுக்கு எதிரான போக்குடைய கட்சிகள் சுமார் 55 ஆசனங்களை
பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பப்படுகின்றது. அவ்வாறு அந்த கட்சிகள் பெற்றுக் கொண்டாள்
5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் அரபு கட்சியின் நிலை அடுத்த ஆட்சியை தீர்மானிப்பதில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் என்று இஸ்ரேலில் இருந்து வெளியாகியுள்ள தேர்தல் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன .