இறந்த உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் | இரணைதீவு பகுதிக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை

Date:

கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் பின்னர் இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் இரணை தீவுக்கு பொது மக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து போராட்ட குழுவினரால் பூநகரி பிரதேச செயலாளர் ,யாழ்மறைமாவட்ட ஆயர் ,யாழ் மனித உரிமை ஆணைகுழு காரியாலங்களுக்குரிய மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்  நிருபர்

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...