வெலிவேரியா காவல்துறையில் உள்ள சிறு குற்றப் பிரிவின் அதிகாரி (OIC) லஞ்சமாக அவர் பெற்ற நாணயத்தாள்களை விழுங்கிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
10,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ள நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையத்தின் அதிகாரிகளால் நேற்று (29) கையும் களவுமாக சிக்கி உள்ளார்.
அதன்பிறகு, அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் 5000 ரூபாய் நோட்டுகள் இரண்டை விழுங்கி உள்ளார்.
இது தொடர்பாக லஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, குறிப்பிட்ட போலிஸ் அதிகாரியை கம்பாஹா மருத்துவமனையில் அனுமதித்தது.
ஒரு வாகன தகராறு தொடர்பாகவே குறிப்பிட்ட அதிகாரி லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.