ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குத் தற்போதைய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றுகளை நாம் நிராகரிக்கின்றோம் எனவும் முன்னைய அரசின் பலவீனம் காரணமாகவே 2019 ஈஸ்டர் தினமன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.