ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் மாவட்ட அமைப்பாளர்கிடம் அவசர கோரிக்கை முன் வைப்பு

Date:

தேர்தல்  மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு  கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன்  மேற்கொள் ளுமாறு  அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர்  ருவான் விஜேவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று திங்கள் கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் ஸ்ரீ கொத்தாவில் இருந்து அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் மின் அஞ்சல் ஊடாகவும் தொலைபேசி வாயிலாகவும் மேற்படி பணிப்புரை கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவினால் விடுக்கப்ப ட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அவசரக் கடிதங்களும் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைமை யகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ கொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும்   எதிர் வரும் ஜீன் மாதப் பகுதியில்  நாடளாவிய ரீதியில் ஒரே சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் கட்சி கிளைகளின் புனரமைப்பு பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறும், மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறும், பொருத்தமான வேட்பாளர்களை தயார் படுத்துமாறும், ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைமையகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நாட்டில் நிலவும்  அரசியல் சூழ்நிலைகளில் இலங்கை மக்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வகிப்பாகம் குறித்து தற்போது பெரிதாக சிந்திக்க தலைப்பட்டுள்ளதாகவும் கடந்த பொதுத் தேர்தல் மூலம் இலங்கை பாராளுமன்றதிற்கு ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகள் இடம் பெறாத துர்பாக்கிய நிலையில் தற்போது அதன் பாரதூரத் தன்மையையும் அவசியத்தையும்  அனைவரும் உணர்ந்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களைக் கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்குமாறும் அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க ப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட விரும்பும்  18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் தமது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை காலதாமதமின்றிக் கட்சி தலைமையகத்திற்கு தபால் மூலம்  அனுப்பி வைக்குமாறு கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தமது விண்ணப்பங்களை பொது செயலாளர், ஐக்கிய தேசிய கட்சி,இல.400. பிட்ட கோட்டை, கோட்டை.எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் இது தொடர்பில்  0112878123 மற்றும்  0777238659 ஆகிய தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...