நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார்.
கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய இழப்புகளைத் தடுக்க தேவையான முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்று பாராளுமன்றில் அவர் தெரிவித்தார்.
2.8 மில்லியன் சனத்தொகையில் 24,38,000 பெண்கள் நுண்நிதிக் கடன் பெற்றுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குக் காரணம் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்துச் செயற்படு கின்றன என்றார்.
நுண் நிதிக் கடன்களிலிருந்து நிவாரணம் கோரி நேற்றிரவு ஹிங்குராகொடவில் பெண்கள் போராட்டம் செய்ததாக அமரசூரிய மேலும் கூறினார்.