இஸ்ரேலின் கடுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகி இருக்கும் காஸா பகுதியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி உள்ள காஸாவில் 2014 ஜுன் முதல் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி தனது அலுவலகம் விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனர் போடோ பென்சோடா தெரிவித்துள்ளார்.