தேசிய ரீதியாக நடை பெறும் கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் சயெலாளர் பிரிவில் பொன் தீவு கண்டல் கிராமத்தில் உள்ள சென் அண்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானம் புனரமைப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை 10.25 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏஸ்ரான்லி டி மெல் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் மா.சறிஸ்கந்தகுமார் , நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி , மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிரின்ஸ் லெம்பேட் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹமட் அலிகான் செரீப், மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.