கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது.
தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாம் வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த பொதிக்குள் காணப்படுவது என்னவென்பது தொடர்பில் சரியாக கூற முடியாது எனவும், அது தொடர்பிலான விசாரணைகளுக்காக தமது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் டாம் வீதி பொலிஸார் கூறினர்.