கொழும்பு – டாம் வீதியில் மர்மப் பொதி | சடலம் என பொலிஸார் சந்தேகம்

Date:

கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது.

தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாம் வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பொதிக்குள் காணப்படுவது என்னவென்பது தொடர்பில் சரியாக கூற முடியாது எனவும், அது தொடர்பிலான விசாரணைகளுக்காக தமது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் டாம் வீதி பொலிஸார் கூறினர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...